ரஞ்சி கோப்பை 2026-27 சீசனில் தமிழ்நாடு அணி நல்ல தொடக்கத்தை அளித்துள்ளது. 1987-88 சீசனுக்கு பின் பலமுறை இறுதிப்போட்டி வரை வந்தும், தமிழ்நாடு அணி ஒருமுறை கூட கோப்பையை வெல்லவில்லை. தமிழ்நாடு அணியில் இருக்கும் பிரச்னை என்ன?, செய்ய வேண்டிய சீர்த்திருத்தம் என்ன?, புதிய பயிற்சியாளர் யோ மகேஷின் செயல்பாடு குறித்து கிரிக்கெட் பயிற்சியாளர் லட்சுமி நாராயணன் விரிவாக பேசி உள்ளார். ரஞ்சி கோப்பை தொடர் ஏற்கெனவே தொடங்கிவிட்ட நிலையில், நாளைய தினம் (அக். 26) மூன்றாம் சுற்றுப் போட்டிகள் தொடங்க உள்ளது. தமிழ்நாடு அணி ரயில்வேஸ் அணியை சென்னை சேப்பாக்கத்தில் எதிர்கொள்கிறது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடந்த முதல் போட்டியில் தமிழ்நாடு அணி ராஜஸ்தான் அணியை