ஆகஸ்ட் 22 ஆம் தேதியான இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக செயற்குழுவில் திமுக தலைவர் ஸ்டாலின் உரையாற்றினார். அவர் பேசுகையில், "நாம் பார்க்காத வெற்றியும் இல்லை; நாம் பாரக்காத தோல்வியும் இல்லை. தேர்தலில்தான் தோல்வி அடைந்திருக்கிறோமே தவிர, நிரந்தரமாக இல்லை. கழகத்தின் எதிர்காலத்தை திட்டமிட நமக்கு கால அவகாசம் கிடைத்திருப்பதாக எடுத்துக் கொள்வோம். கழக வரலாற்றில் இது மிக முக்கியமான செயற்குழுவாக அமையவிருக்கிறது. தலைவர் கலைஞரின் வரிகளை நீங்க மறந்திருக்க மாட்டீர்கள். இந்த கருணாநிதியின் வாழ்வு முடிந்தாலும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாழ்வு முடியாது! அதனை, அதன் அமைப்புமுறை காப்பாற்றும். அப்படிப்பட்ட அந்த அமைப்பு முறையின் வலிமையாலதான், நாம் நிற்கிறோம். நம் தவறுகளை முதலில் நாம் ஒத்துக் கொள்ள