சமூக வலைதள ரீல்ஸ் மூலம் பிரபலமான 'லுங்கி பாய்ஸ்' ராஜ் ப்ரியன், ‘சீன்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கோவில்பட்டி சத்யபாமா திரையரங்கிற்கு வருகை தந்த அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தியேட்டருக்குள் கிடைத்த அமோக வரவேற்பு மறக்க முடியாத அனுபவமாக அமைந்ததாகவும், நடிகர் சூர்யா படத்தில் காவல்துறை கதாபாத்திரத்தில் நடித்தது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகவும் அவர் கூறினார். இந்த வாய்ப்பை வழங்கிய படக்குழுவிற்கும், தமக்கு பேராதரவு அளித்த இணையதள ரசிகர்கள் மற்றும் குடும்பத்தினருக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.