இமாச்சலப் பிரதேசத்தில் பாராகிளைடிங் செய்த ரஷ்ய வீரர் ஒருவர், உயர் மின்னழுத்த மின்கம்பியில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மண்டி – பதார் நெடுஞ்சாலையில் உள்ள தண்டு எனும் பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. பாராகிளைடிங் செய்துகொண்டிருந்த ரஷ்ய வீரர், எதிர்பாராதவிதமாக 33 கே.வி. உயர் மின்னழுத்த மின்கம்பிகளில் சிக்கிக்கொண்டார். இதனால் அவர் அந்தரத்தில் தொங்கியபடி உயிருக்கு ஆபத்தான நிலையில் தவித்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மாநில பேரிடர் மீட்புப் படை மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர், தங்களது உயிரை பணையம் வைத்து, ரஷ்ய வீரரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மின்சார விநியோகம் நிறுத்தப்பட்டு, நீண்ட போராட்டத்திற்குப் பிறகு ரஷ்ய வீரர் பாதுகாப்பாக மீட்கப்பட்டார். இந்த மீட்புப் பணியின் காட்சிகள்