உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற கேதார்நாத் சிவன் கோவில், குளிர்காலத்தை முன்னிட்டு நவம்பர் 12 ஆம் தேதி முதல் மூடப்பட உள்ளது. ஆண்டுதோறும் கடும் பனிப்பொழிவு காரணமாக குளிர்காலத்தில் கோவில் நடை மூடப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான யாத்திரைக் காலம் நிறைவடைவதை முன்னிட்டு இறுதி மாலை தரிசனத்திற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் கேதார்நாத் தலத்தில் குவிந்து காணப்பட்டனர். நேற்று ஒரே நாளில் மொத்தம் 19.2 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, கோவிலின் உற்சவ மூர்த்தி அடங்கிய புனித டோலி கோவிலுக்குள் கொண்டுவரப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. நாளை கோவில் நடை அடைக்கப்பட்டதும், உற்சவ மூர்த்தி குளிர்கால வழிபாட்டிற்காக வேறு இடத்திற்கு எடுத்துச் செல்லப்பட உள்ளது. இதனால்