சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளின் வளர்ச்சியை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில், 25 ஆண்டுகளுக்கான உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் தயாரிக்கப்பட உள்ளது. இதற்காக, நகர்ப்புற உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களைத் தயாரிப்பதற்கான ஒப்பந்தப்புள்ளிகளை, தமிழ்நாடு நகர்ப்புற உட்கட்டமைப்பு நிதிச் சேவை நிறுவனம், வெளியிட்டுள்ளது. இதன்படி, சென்னை மாநகராட்சி, ஆவடி மற்றும் தாம்பரம் மாநகராட்சிகள் மட்டுமின்றி, பல்வேறு நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளும் இந்தத் திட்டத்தில் இடம்பெறவுள்ளன. சென்னை மாநகராட்சி மற்றும் திருமழிசை, நாரவாரிக்குப்பம், மீஞ்சூர், கும்மிடிப்பூண்டி, திருக்கழுக்குன்றம், திருப்போரூர், உத்திரமேரூர் ஆகிய 7 பேரூராட்சிகள் ஒரு தொகுப்பாகவும், ஆவடி, தாம்பரம் மாநகராட்சிகள், மறைமலைநகர், திருவேற்காடு நகராட்சிகள் மற்றொரு தொகுப்பாகவும் திட்டமிடப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தின் கீழ், குடிநீர் விநியோகம், கழிவுநீர் மேலாண்மை, மழைநீர் வடிகால்வாய்கள், திடக்கழிவு மேலாண்மை, சாலை வசதிகள், போக்குவரத்து