கேரளாவில் சமூக வலைதளங்களில் பிரபலமான Vlogger ஜோடியான அகில் மற்றும் மேகா தொடர்பான தகவல் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரே தெருவில் வசித்து, காதலித்து திருமணம் செய்துகொண்ட இருவரும், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூபில் தங்களது வாழ்க்கை தருணங்களை பகிர்ந்து வந்தனர். இதனால் ரசிகர்கள் மத்தியில் ‘ட்ரீம் கப்பிள்’ என்ற பெயரையும் பெற்றிருந்தனர்.
இந்நிலையில், நிகில் தனது வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது, நள்ளிரவில் மேகா பைகளுடன் தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. மனைவியை காணவில்லை என காவல்நிலையத்தில் நிகில் புகார் அளித்துள்ளார்.
போலீசார் விசாரணை நடத்திய நிலையில், வீட்டில் இருந்த பணம் மற்றும் நகைகளை எடுத்துக்கொண்டு, உள்ளூர் பேருந்து ஓட்டுநர் ஒருவருடன் மேகா வீட்டை விட்டு வெளியேறியதாக தகவல் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் கேரள சமூக வலைதளங்களில்