ஆம்பூர் அடுத்த சோமலாபுரம் மற்றும் பெரியவரிகம் பகுதிகளில் சட்டவிரோத மணல் குவாரி.... பாலாற்றில் இரவு நேரங்களில் பிணங்களை தோண்டி மணல் கொள்ளை... மனித எலும்பு கூடுகள் வெளியே கிடப்பதால் மக்கள் அச்சம்... முழு விவரம் இதோ! திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த சோமலாபுரம் மற்றும் அருகிலுள்ள பெரியவரிகம் பகுதிகளுக்கு இடையே உள்ள பாலாற்றின் அருகே மணல் குவாரி அமைத்து இரவு நேரங்களில் சட்டவிரோதமாக மணல் கடத்தப்பட்டு வருவதாக அப்பகுதி அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இரவு முழுவதும் எந்தவித அச்சமுமின்றி மணல் கடத்தலில் ஈடுபடும் நபர்கள் சுடுகாட்டை கூட விட்டு வைக்காமல் அங்கும் புதைக்கப்பட்ட பிணங்களை தோண்டி எடுத்து மணலை கொள்ளையடித்து செல்லும் சம்பவம் தொடர்ந்து அரங்கேறி வருவது அப்பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை