கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி புறவழிச்சாலை வரை அமையவுள்ள இந்த வழித்தடத்தில், சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, ஏற்கெனவே பயன்பாட்டில் இருக்கும் ப்ளூ லைன் மெட்ரோ சுரங்கப்பாதைக்குக் கீழே புதிய சுரங்கப்பாதை அமைப்பது என்பது சாதாரணமான காரியமல்ல. தொழில்நுட்ப ரீதியாகப் பல சவால்கள் நிறைந்த இந்தப் பணியில், சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றன. இதற்கிடையே, பனகல் பூங்காவில் இருந்து தொடங்கப்பட்ட சுரங்கப்பாதை அமைக்கும் பணி, போட் கிளப் பகுதியை நெருங்கியுள்ளது. நவம்பர் மாத இறுதிக்குள் போட் கிளப் மெட்ரோ ரயில் நிலையத்தைச் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழித்தடத்தில் தி.நகரில் அமையவுள்ள பனகல் பார்க் மெட்ரோ ரயில் நிலையம் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. ஏனென்றால், ரங்கநாதன்