இந்தியப் பெருங்கடலுடன் ரஷ்யாவை இணைத்து, இந்தியாவுக்கான அணுகலை வழங்கக்கூடிய ஒரு ரயில் பாதையை அமைப்பது குறித்து ரஷ்யா பரிசீலித்து வருகிறது.
ரஷ்யாவின் துணைப் பிரதமர் மராட் குஸ்னுல்லின் (Marat Khusnullin) 'டாஸ்' (TASS) செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் இக்கருத்தை வெளியிட்டார். போஸ்பரஸ் (Bosphorus) மற்றும் ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) போன்ற முக்கியமான கடல்வழிப் பாதைகள் தொடர்பான அபாயங்களைக் குறைக்க, ரஷ்யா மாற்றுப் பாதைகளை ஆராய வேண்டும் என்று அவர் கூறினார். ரஷ்யா முன்மொழிந்துள்ள திட்டம் என்ன?
இந்தியப் பெருங்கடலைச் சென்றடையும் வகையில் ஒரு ரயில் பாதையை அமைப்பது குறித்து ரஷ்யா ஆராய வேண்டும் என்று குஸ்னுல்லின் கூறினார். ரஷ்யாவிலிருந்து தொடங்கி துர்க்மெனிஸ்தான், ஈரான், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் வழியாகச் சென்று இந்தியாவை