மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் இருந்து, மிசோரம் மாநிலம் சைராங் நோக்கிச் சென்ற கொல்கத்தா - சைராங் விரைவு ரயில், இன்று காலை 6.54 மணியளவில் கவுகாத்தி அருகே திகாரு ரயில் நிலையம் பகுதியில் சென்றுகொண்டிருந்தது. அப்போது திடீரென ரயிலின் 5 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகின. இந்த விபத்து தொடர்பாக வெளியாகியுள்ள 45 விநாடிகள் கொண்ட காணொளியில், ரயில் ஓட்டுநர் பல்வேறு கட்டுப்பாட்டு கருவிகளை இயக்கியும் ரயிலைக் கட்டுப்படுத்த முடியாமல் போராடுவது பதிவாகியுள்ளது. அவசரகால பிரேக் பயன்படுத்தப்பட்டும் செயல்படவில்லை என்றும், பிரேக் குழாயில் அழுத்தம் குறையவில்லை என்றும் ஒருவர் பதற்றத்துடன் கூறுவதை அந்த வீடியோ காட்சியில் கேட்க முடிகிறது. தொடர்ந்து ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. இதற்கிடையே, விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்போ,