திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த செங்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி ராஜேஷ். இவருக்கு திருமணமாகி மணிமேகலை என்கிற மனைவி இருந்தார். மணிமேகலைக்கு ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த துர்காபிரசாத் என்பவரிடம் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது காதலாக மாறி இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மாலை துர்கா பிரசாத் மணிமேகலையை இருசக்கர வாகனத்தில் ஊத்துக்கோட்டை அடுத்த சென்றாம்பாளையம் காப்புக்காடு பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் மணிமேகலைக்கு வேறு ஒரு நபருடன் தொடர்பு இருப்பதாக துர்கா பிரசாத்க்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதன் காரணமாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே