இந்தியாவின் தென்பகுதியில் தொழில் வளர்ச்சிக்கான போட்டி தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக, விமானப் போக்குவரத்து வசதியை மேம்படுத்துவதன் மூலம் முதலீடுகளையும், ஏற்றுமதி வர்த்தகத்தையும் ஈர்க்க மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வரிசையில், ஆந்திரப் பிரதேச அரசு தனது விமானப் போக்குவரத்துக் கட்டமைப்பை விரிவுபடுத்தும் முயற்சியில் வேகம் காட்டி வருகிறது. முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசு, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளை முக்கிய நகரங்களுடன் விரைவாக இணைக்கும் நோக்கில் புதிய விமான நிலையத் திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு எல்லையை ஒட்டிய குப்பம் மற்றும் ஆந்திராவின் வடக்குப் பகுதியில் உள்ள ஸ்ரீகாகுளம் ஆகிய இடங்களில் புதிய கிரீன்பீல்டு விமான நிலையங்களை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த இரண்டு இடங்களிலும் விமான நிலையம்