ராமேஸ்வரம் பின்னணியில் நடக்குற இந்தப் படத்தோட கதை, ரொம்பவே வித்தியாசமானது. தவசி என்ற கதாபாத்திரத்தில் நடிச்சிருக்கிற கருணாஸ், கடலில் திதி கொடுக்குறவர்கள் வீசுற சில்லறைக் காசுகளை நீருக்கடியில் சென்று சேகரிச்சு, தன்னோட வாழ்க்கையை நடத்திட்டு இருக்காரு. அப்படி ஒரு நாள் அவருக்கு கடலுக்குள் ஒரு பழமையான தங்க நகை கிடைக்குது. கிடைச்ச நகையை தன்னுடையதா எடுத்துக்காம, நல்லெண்ணத்தோட போலீஸ்கிட்ட ஒப்படைக்கிறார். ஆனா அதுக்கப்புறம் தான் அவருடைய வாழ்க்கையே தலைகீழாக மாறுது! நேர்மையாக நடந்துகிட்ட ஒரு சாதாரண மனிதரே, எதிர்பாராத விதமாக திருட்டுக் குற்றச்சாட்டுக்கு ஆளாகிறார். அதுக்கப்புறம் போலீஸ், நீதிமன்றம் என கதை நகருது. “ஒரு நிரபராதியின் வாழ்க்கையில் சட்டமே தவறான முடிவை எடுத்தால், அதனால் பாதிக்கப்படுற அந்த மனிதனுக்கும் அவனோட குடும்பத்துக்கும் யார்