ரூ.46 கோடி காசோலை மோசடி புகார்: நடிகை அம்பிகா பரபரப்பு பேட்டி! நடிகை ராதா, தனது சகோதரி அம்பிகா மற்றும் சகோதரர் குஞ்சன் நாயர் மீது ரூ.46 கோடி காசோலை மோசடி செய்ததாகச் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்தார்.
இதற்கு விளக்கமளித்துச் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகை அம்பிகா, சொத்து மற்றும் நகை கணக்குகளைத் தீர்க்க ராதாவே காசோலைகளை வழங்கிவிட்டு, வங்கியில் அதைத் தடுத்து நிறுத்தியதாகத் தெரிவித்தார். போரூர் ஏ.ஆர்.எஸ். கார்டன் சொத்திலிருந்து தனது பெயர் நீக்கப்பட்டுள்ளதாகவும், ராதாவிடமிருந்து தனக்கு ரூ.97 கோடி வரை வரவேண்டியுள்ளது என்றும் அவர் கூறினார். மேலும், தான் உண்மைகளை வெளிப்படுத்தினால் ராதா சிறைக்குச் செல்ல நேரிடும் என்றும் எச்சரித்தார்.