தமிழ்நாடு நிதி அமைச்சர் மரிய வில்சன், "முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் கேக் வழங்கும் நிகழ்வு நடைபெறுகிறது. அதன் அடிப்படையில் ஆர்.கே. நகர் பள்ளியில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு, முதலமைச்சரின் வாழ்த்துகளைப் பகிர்ந்ததில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். அரசியல் ரீதியாகப் பார்த்தால், சட்டம்-ஒழுங்கு குறித்து எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு ஒரு தவறான பிம்பத்தை உருவாக்குகின்றன. கடந்த 50-60 ஆண்டுகால ஊழலை ஆறு மாதங்களில் ஒழித்தது போல, சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகளையும் முதலமைச்சர் இரும்புக்கரம் கொண்டு அடக்குவார். டாஸ்மாக் விற்பனை குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சரே கவலை தெரிவித்திருப்பது அரசின் நேர்மையான பார்வையைக் காட்டுகிறது. மேலும், எடப்பாடி பழனிசாமி மீது அவரது சொந்தக் கட்சியினருக்கே நம்பிக்கை இல்லாதபோது,