வேலூர் வி.ஐ.டி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் பங்கேற்றுப் பேசினார்.
அப்போது அவர், கடந்த பத்தாண்டுகளில் நாடு முழுவதும் 94 ஆயிரம் அரசுப் பள்ளிகளும், தமிழகத்தில் 200-க்கும் மேற்பட்ட பள்ளிகளும் மூடப்பட்டிருந்தாலும், த.வெ.க அரசு பொறுப்பேற்ற ஆறு மாதங்களில் ஒரு அரசுப் பள்ளியைக் கூட மூடவில்லை என்றார். மலை உச்சியில் உள்ள ஒரு ஏழை மாணவனுக்காகக் கூட ஒற்றை ஆசிரியருடன் பள்ளி செயல்படும் என்றும், மாணவர் சேர்க்கை குறைவு என்ற காரணத்திற்காக அரசுப் பள்ளிகளை ஒருபோதும் மூட மாட்டோம் என்றும் உறுதியளித்தார்.
கதைகள் வழியே கணிதம் போன்ற புதிய கற்றல் அணுகுமுறைகள், ரூ.44,527 கோடி நிதி ஒதுக்கீடு மற்றும் 'சூப்பர் கிளீன், சூப்பர் கேம்பஸ்' திட்டங்கள் மூலம் அரசுப் பள்ளிகளின் தரம்