சட்டம் - ஒழுங்கு விவகாரத்தில் தமிழக அரசு தீவிர நடவடிக்கை: அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி
சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ விவகாரத்தில் கனிமொழி சமூக ஊடகத் தகவலின் அடிப்படையில் வெளியிட்ட அறிக்கையில் உண்மையில்லை என்றார். பேரவை துணைத் தலைவர் விவகாரத்தில் விசாரணைக்குப் பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலமைச்சர் விஜய் கூடுதல் நிதியுதவி வழங்கியுள்ளதாகவும், நிலுவையிலுள்ள வழக்குகள் ஆய்வு செய்யப்படும் என்றும் கூறினார். மேலும், சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக திமுக தவறான பிரசாரம் செய்வதாகக் குற்றம் சாட்டிய அவர், இந்த ஆட்சியில் 19 ஆயிரம் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் சிறையிலடைக்கப்பட்டுள்ளதோடு, 6,700 போக்சோ