உடல் எடை எப்படி இருக்கணும் ? எந்த வயதில் எவ்வளவு இருக்கணும் ? அதற்கு என்னென்ன செய்யணும்? அழகு எது? ஆபத்து எது? என விவரிக்கிறார் பாரம்பரிய சித்த வர்ம மருத்துவர் செந்தில்குமார்.
'ஒல்லியாக இருக்க சிலர் ஆசைப்படுகிறார்கள். சிலர் குண்டாக ஆசைப்படுகிறார்கள். எப்படி இருப்பது நல்லது? 10 முதல் 20 வயது வரை எப்படி வெண்டுமானாலும் இருக்கலாம். ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் 20 வயது வரை எந்த எடையிலும் இருக்கலாம். குறிப்பாக குள்ளமாக உள்ளவர்கள் சற்று பூசினாற்போல இருந்தால் தவறில்லை.
ஒல்லியாக உள்ளவர்கள் குண்டாகவோ, அல்லது குண்டாக இருப்பவர்கள் அதிகம் ஒல்லியாகவோ தேவையில்லை. ஆனால், அதிக எடையோ அல்லது மிகக் குறைந்த எடையோ உள்ளவர்கள் மட்டும் சராசரியை எட்ட முயற்சிக்கலாம். இதற்கு சித்த