குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் விஜய் அரசுப் பள்ளிக்கு நேரில் சென்று மாணவர்களுடன் கொண்டாடினார். வகுப்பறைகளுக்கு சென்ற அவர், குழந்தைகளுக்கு தனது புகைப்படம் அச்சிடப்பட்ட குழந்தைகள் தின வாழ்த்து அட்டைகள் மற்றும் கேக்குகளை (Cakes) நேரில் வழங்கி வாழ்த்துத் தெரிவித்தார். மாறுவேடமணிந்து வந்த மாணவர்களுடன் உரையாடியதோடு, அவர்களின் நோட்டுப் புத்தகங்களில் ஆட்டோகிராஃப் கையெழுத்தும் போட்டுக் கொடுத்தார். முதல்வரின் இந்த அன்பான அணுகுமுறையால் பள்ளி மாணவர்கள் மிகுந்த உற்சாகமும் மகிழ்ச்சியும் அடைந்தனர்.