நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரண்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் நடிப்பில் நவம்பர் 5-ஆம் தேதி வெளியான 'ராமாயணா பாகம் 1' திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் வசூல் சாதனை படைத்து வருகிறது. ஏ.ஆர். ரகுமான் மற்றும் ஹான்ஸ் ஜிம்மர் இசையமைத்துள்ள இப்படம், வெளியான எட்டு நாட்களில் உலக அளவில் ரூ.1,033.55 கோடி வசூலித்துள்ளது. இதில் இந்தியாவில் ரூ.675.05 கோடியும், வெளிநாடுகளில் ரூ.358.50 கோடியும் அடங்கும். இதன் மூலம், ரூ.1,800 கோடி வசூலித்து முதலிடத்தில் உள்ள ரண்வீர் சிங்கின் 'துரந்தர் 2' படத்தின் சாதனையை விரைவில் முறியடித்து 'ராமாயணா' முதலிடம் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.