கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் அசம்பாவிதம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி இன்னுயிரை பறிகொடுத்தனர். இந்த துயர சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. இந்தச் சூழ்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 31 பேருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்க தமிழக அரசு முடிவு செய்தது. இதன் தொடர்ச்சியாக, கடந்த மாதம் 10ம் தேதி, கரூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் ஜேசப் விஜய் வழங்கினார்.
இதனை எதிர்த்து நாம் தமிழர் கட்சியின் மீனவர் பாசறை நிர்வாகி தீரன்