வழக்கறிஞர் கோபாலகிருஷணன் நமது ஜீ தமிழ் நியூஸ் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், "BLM சொசைட்டியின் கேரளா, தமிழ்நாடு, பாண்டிச்சேரி கிளைகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்துகிறது. கோழிக்கோடு குற்றப்பிரிவு போலீசார் பதிவுசெய்த எப்ஐஆர் அடிப்படையில் இச்சோதனை நடைபெறுகிறது; இதற்கு முழு ஒத்துழைப்பு தருகிறோம். நிறுவனத்தில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் ஊழியர் அளித்த போலிப் புகாரே இதற்கு காரணம். உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தபோது, தவறுதலாக புகார் அளித்ததாக அவர் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார். திரு. பிரேம்ஜி கைது செய்யப்பட்டதும் சட்டவிரோதம் எனக் கூறி கோழிக்கோடு நீதிமன்றம் அவரை விடுவித்தது. 20 ஆண்டுகளாக இயங்கும் எங்கள் சொசைட்டியில் உள்ள 4.61 லட்சம் உறுப்பினர்கள் யாரும் புகார் அளிக்கவில்லை. தொழில்முறை போட்டி காரணமாகவே இத்தகைய பொய்