இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்புத் தளவாட உற்பத்திக்கு வலுசேர்க்கும் வகையில், பினாகா ராக்கெட் ஏவுகணை அமைப்புக்கு சுமார் 4 ஆயிரம் ஆர்டர்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில், இந்திய ராணுவத்துக்கு 2 ஆயிரம் ராக்கெட்டுகளும், ஏற்றுமதிக்காக ஆர்மீனியாவுக்கு (Armenia) மேலும் 2 ஆயிரம் ராக்கெட்டுகளும் ஒதுக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த ஒப்பந்தங்களுக்கான நடவடிக்கைகள் 2026 டிசம்பர் மாத இறுதிக்குள் அடுத்த கட்டத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. Apollo Micro Systems நிறுவனத்தின் நிர்வாகம், சமீபத்திய வருவாய் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளதாக இந்திய பாதுகாப்பு மேம்பாட்டு அமைப்பு செய்தி வெளியிட்டுள்ளது.