திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட தச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகளைப் பதிவிட்டு வந்துள்ளார். இந்நிலையில், இவரது தோழி மூலம் செல்போன் எண்ணைப் பெற்ற யூடியூப் கவிதை கோபால் என்பவர், அப்பெண்ணை தொடர்புகொண்டு பேசியதாகக் கூறப்படுகிறது. அப்போது, சினிமாவில் நடிப்பதற்கு ஆர்வம் உள்ளதா எனக் கேட்டுள்ளார். அதற்கு அப்பெண் தனக்கு நடிப்பதில் ஆர்வம் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இதையடுத்து, சினிமாவில் நடிக்க வாய்ப்பு பெற்றுத்தர வேண்டுமானால் முதலில் 20 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்றும், இல்லையெனில் தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் தன்னுடன் ஆசைக்கு இணங்க வேண்டும் என்றும் கவிதை கோபால் கூறியதாகப் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண், தனக்கு நேர்ந்த அனுபவம் குறித்து நெல்லை மாநகர காவல் ஆணையாளரிடம்