சமீபத்தில் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில், போட்டியாளர் ஒருவருக்கு விஜய் சேதுபதி அறிவுரை வழங்கியதாக கூறப்படுகிறது. அப்போது தலைமைத்துவம், வாக்குறுதி, பொறுப்பு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து அவர் பேசியுள்ளார். வைரலாகும் அந்த வீடியோவில், தலைவன் என்றால் என்னவென்றே தெரியாமல் செயல்படக்கூடாது என விஜய் சேதுபதி கூறுகிறார். தலைமைத்துவம் என்றால் என்னவென்று தெரியாமல் வாக்குறுதிகளை அள்ளி வழங்கக்கூடாது என்றும் பிரச்னைகளும் பொறுப்பும் வரும்போது, எதிரணியினர் மீது பழியை சுமத்திவிட்டு ஓடுவது தலைவனுக்கான பண்பு இல்லை என்றும் பேசியுள்ளார். இது ஏமாற்று வேலை என்றும் அந்த வீடியோவில் குறிப்பிட்டதாக கூறப்படுகிறது. இந்த கருத்துகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. குறிப்பாக, தமிழக அரசியலை சுட்டிக்காட்டும் வகையில்தான் அவர் பேசியிருப்பதாக சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.